கோவிலுக்கு வந்த பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
கோவிலுக்கு வந்த பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர்
புகழிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகத்திற்காக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் ஏராளமான பக்தர்கள் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து காவடிகள் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதில், விரதம் இருந்த பெண்களும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். இதில் சில பெண்கள் மயக்கம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story