ராஜபாளையத்தில் விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரம்
ராஜபாளையத்தில் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ராஜபாளையத்தில் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சதுர்த்தி விழா
விநாயகர் சதுா்த்தி விழா வருகிற 18-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆண்டுதோறும் இந்து முன்னணி சார்பில் மாவட்டத்தில் உள்ள முக்கியமான இடங்களில் வைத்து வழிபடுவதற்காக விநாயகர் சிலைகள் தயார் செய்யப்படுவது வழக்கம்.
இந்த சிலைகள் விநாயகர் சதுர்த்தி அன்று முக்கிய இடங்களில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறும் நாளன்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.
வர்ணம் பூசும் பணி
ராஜபாளையத்திலும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக விதவிதமாக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதில் விவசாய விநாயகர், பளு தூக்கும் விநாயகர், பைக் ஓட்டும் விநாயகர், நின்ற கோலத்தில் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.. தற்போது இந்த சிலைகளுக்கு வர்ணம் பூசும்பணி நடைபெற்று வருகின்றது. இன்னும் ஒரு வாரத்திற்குள் வர்ணம் பூசும் பணி முடிவடைந்து பொதுமக்கள் வழிபாடு செய்வதற்காக வைக்கப்படும்.