கோவிலுக்கு சொந்தமான இடங்களில் எல்லை கற்கள் பதிக்கும்பணி தீவிரம்


கோவிலுக்கு சொந்தமான இடங்களில் எல்லை கற்கள் பதிக்கும்பணி தீவிரம்
x

எல்லை கற்கள் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் எல்லை கற்கள் பதிக்கும்பணி தீவிரம்

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் புகழ்பெற்ற பிறவி மருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடங்கள், நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ளன. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவின் பேரில் இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்து எல்லை கற்கள் பதிக்கும் பணி திருத்துறைப்பூண்டி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று இந்து சமய அறநிலையத்துறையின் தனி தாசில்தார் ராஜாராமன், ஆய்வு மேற்கொண்டு அளவீடு செய்தார். இந்த ஆய்வின் போது கோவில் செயல் அலுவலர் முருகையன், நில அளவையர்கள் ராதாகிருஷ்ணன், மாரிராஜ் மற்றும் கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர். இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்படும்.


Next Story