கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அளவை கற்கள் நடும் பணி


கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அளவை கற்கள் நடும் பணி
x
தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அளவை கற்கள் நடும் பணி

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் அருகே நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாக போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் உதவி ஆணையர் ப.மணவழகன் அறிவுரையின் பேரில், இக்கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்து அந்த இடங்களில் அளவை கற்கள் நடும் பணி நேற்று நடந்தது. இந்த பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் நில அளவையர்கள் ஈடுபட்டிருந்தனர்.


Next Story