ராகுல்காந்தி பொதுக்கூட்டத்துக்கு மேடை அமைக்கும் பணி தீவிரம்
கன்னியாகுமரியில் ராகுல்காந்தி பொதுக்கூட்டத்துக்கு மேடை அமைக்கும் பணி தீவிரம்
கன்னியாகுமரி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார். இந்த பாத யாத்திரையின் தொடக்க நிகழ்ச்சி கன்னியாகுமரியில் 7-ந்தேதி மாலையில் நடக்கிறது. நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதையொட்டி பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக கன்னியாகுமரி கடற்கரையையொட்டி பிரமாண்டமான மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேடை அமைக்கும் பணியில் மும்பையில் இருந்து வந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story