அமுத குளம் அமைக்கும் பணியை மத்திய கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
அமுத குளம் அமைக்கும் பணியை மத்திய கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், மல்லகுண்டா ஊராட்சியில் உள்ள பலகல்பாவையில், அமிர்தசரோவர் திட்ட த்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பில் அமுத குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை ஜல் சக்தி அபியான் திட்டத்தின் திருப்பத்தூர் மாவட்டத்திற்கான மத்திய கண்காணிப்பு அலுவலரும், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இயக்குனருமான தினேஷ் குமார் ராணா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் அமர்குஷ்வாஹா, ஜல் சக்தி அபியான் திட்டத்தின் தொழில்நுட்ப அலுவலர் ராஜேஷ் குலதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, வேளாண்மை இண இயக்குனர் பச்சையப்பன், ஊரக வளர்ச்சித்துறை செயற் பொறியாளர் சுந்தரபாண்டியன், உதவி செயற்பொறியாளர்கள் மகேஷ் குமார், பழனிசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
அதே போன்று ஜோலார்பேட்டை அடுத்த நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் கே.பந்தாரப்பள்ளி ஏரிக்கரையில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளையும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கான மத்தியக்குழு கண்காணிப்பு அலுவலர் தினேஷ் குமார் ராணா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள்.