20 ஆயிரம் விதைப்பந்துகள் வீசும் பணி தொடக்கம்


20 ஆயிரம் விதைப்பந்துகள் வீசும் பணி தொடக்கம்
x

பாலமதி மலையில் 20 ஆயிரம் விதைப்பந்துகள் வீசும் பணி தொடங்கியது.

வேலூர்

வேலூரை பசுமையாக்க 20 ஆயிரம் விதைப்பந்துகள் தயாரிக்கும் பணி நடைபெற்றது. இந்தநிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்ய உள்ளதால் தயாரிக்கப்பட்ட விதை பந்துகளை மலைப்பகுதியில் வீசும் நிகழ்ச்சி பாலமதி மலையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் தினேஷ்சரவணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநகராட்சி மேயர் சுஜாதா கலந்து கொண்டு பேசினார். இதில் காட்பாடி ஆக்சீலியம் கல்லூரி மாணவிகள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். பின்னர் மலைப்பகுதியில் விதைப்பந்துகள் வீசப்பட்டது. மாணவிகள் ஆர்வமுடன் அங்குள்ள மலைப்பகுதிகளில் விதைப்பந்துகளை வீசினர்.

வேம்பு, புங்கை, பூவரசம் போன்ற விதைகள் மூலம் விதைபந்துகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், முதல்கட்டமாக பாலமதி மலையில் வீசும் பணி தொடங்கி உள்ளது. பின்னர் வேலூரை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் இந்த விதைப்பந்துகள் வீசப்படும் என்று தினேஷ்சரவணன் கூறினார்.


Next Story