தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் நகைகள் கொள்ளை


தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து  6 பவுன் நகைகள் கொள்ளை
x

தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் நகைகள் கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 6 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தொழிலாளி

கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி கிராமத்தில் கீழத்தெருவில் வசித்து வருபவர் சண்முகையாத்தேவர். விவசாயி. இவரது மகன் ராமச்சந்திரன் (வயது 43). தொழிலாளி. இவர் சவலாப்பேரி நாற்கர சாலை அருகில் புதியதாக வீடு கட்டி குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சமீபத்தில் வீட்டை பூட்டி விட்டு கேரளாவில் புத்தூர் சென்று ஒரு நிறுவனத்தில் ராமச்சந்திரனும், அவரது மனைவியும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்கள்.

நகைகள் கொள்ளை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் ராமச்சந்திரன் வீட்டின் கதவை பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு இருந்த பீரோவையும் உடைத்து அதில் இருந்த 4 பவுன் சங்கிலி, 2 பவுனில் 4 மோதிரங்கள் ஆக மொத்தம் 6 பவுன் நகைகளை திருடி சென்று விட்டனர்.

நேற்று காலையில் வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ராமச்சந்திரனுக்கு தகவல் கொடுத்தனர். கேரளாவில் இருந்து ராமச்சந்திரன் ஊருக்கு வந்து, வீட்டில் நடந்துள்ள கொள்ளை சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோணிதீலீப் ஆகியோர் சம்பவ வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் ரேகைகளை பதிவு செய்து சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story