விஷம் குடித்து தொழிலாளி தற்கொைல
சந்தவாசல் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொைல செய்து கொண்டார்.
திருவண்ணாமலை
கண்ணமங்கலம்
சந்தவாசல் அருகே உள்ள துரிஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 47), கூலி தொழிலாளி. இவர் அடிக்கடி உடல் நலக்கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி மதியம் இவர் பயிருக்கு வைத்திருந்த பூச்சி மருந்து (விஷம்) குடித்து விட்டு மயங்கி கிடந்தார்.
உடனடியாக அவரை சிகிச்சைக்காக போளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து முருகனின் மனைவி சுமதி சந்தவாசல் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story