கன்னிவாடியில் கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை


கன்னிவாடியில் கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 1 May 2023 2:30 AM IST (Updated: 1 May 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

கன்னிவாடியில் கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல்

கன்னிவாடி மணியகாரத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சரண்யா (30) என்ற மனைவியும், 1½ வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக வெங்கடேசன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த வெங்கடேசன் கடந்த 28-ந் தேதி அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கன்னிவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெள்ளையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு படைவீரர்களை வரவழைத்து, வெங்கடேசனின் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர். தொடர்ந்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story