மகள் இறந்த சோகத்தில் தொழிலாளி தற்கொலை
மகள் இறந்த சோகத்தில் தொழிலாளி தற்கொலை
கன்னியாகுமரி
புதுக்கடை:
புதுக்கடை அருகே உள்ள முக்காடு, பொற்றவிளையை சேர்ந்தவர் ரதீஷ் (வயது43), கூலி தொழிலாளி. இவரது மனைவி உஷா. இவர்களுக்கு அபிநயா (12) என்ற ஒரு மகள் இருந்தார். கடந்த 1½ மதத்திற்கு முன்பு மகள் அபிநயா நோய்வாய்ப்பட்டு திடீரென இறந்தார். அதன்பின்பு ரதீஷ் மது பழக்கத்திற்கு அடிமையாகி மிகுந்த சோகத்தில் காணப்பட்டார். அவரை உறவினர்கள் தேற்றி வந்தனர். இந்தநிலையில் சம்பவத்தன்று மதியம் ரதீஷ் வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக இவரது மனைவி உஷா புதுக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story