சுவரில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
திருமருகல் அருகே குளத்தின் படித்துறை சுவரில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.
திட்டச்சேரி:
நன்னிலம் குளக்குடி குடியானத் தெருவை சேர்ந்தவர் மனோகர் (வயது53).கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு ஏர்வாடியில் பிளம்பிங் வேலை செய்து முடித்து விட்டு அவருடன் வேலை பார்க்கும் நண்பர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் திருப்பனையூருக்கு விட சென்றுள்ளார்.. அப்போது செல்லும் வழியில் திருப்பனையூரில் உள்ள சிவன் கோவில் குளக்கரையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அருகில் உள்ள படித்துறை சுவரில் 2 ேபரும் அமர்ந்துள்ளனர்.. பின்னர் மனோகரின் நண்பர் சென்று விட்டார். ஆனால் மனோகர் மட்டும் அமர்ந்திருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மனோகர், படித்துறை சுவரில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேேய உயிரிழந்தார். மறுநாள் காலை அந்த வழியாக சென்றவர்கள் மனோகர் பிணமாக கிடந்ததை பார்த்து திருக்கண்ணபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.