விபத்தில் தொழிலாளி பலி
தாயில்பட்டி அருகே விபத்தில் தொழிலாளி பலியானார்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அருகே உள்ள மேல கோதை நாச்சியார்புரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 47). பட்டாசு தொழிலாளி. இவர் இருசக்கர வாகனத்தில் சேதுராமலிங்கபுரம் அருகே உள்ள பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாத்தூரில் இருந்து தாயில்பட்டி வழியாக வெம்பக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்த அரசு பஸ் கீழ தாயில்பட்டி அருகில் எதிர்பாராதவிதமாக மோதியதில் ஜெயபால் பலத்த காயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் ஜெயபால் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசில் ஜெயபால் மகன் மனோ புகார் அளித்தார். அதன்பேரில் அரசு பஸ் டிரைவர் மேட்டுப்பட்டியை சேர்ந்த சுப்புராஜ் (58) மீது சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.