விபத்தில் தொழிலாளி பலி
விபத்தில் தொழிலாளி பலியானார்.
வாசுதேவநல்லூர்:
விருதுநகர் மாவட்டம் சொக்கநாதன்புத்தூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 33). தொழிலாளியான இவர் தற்போது சங்கரன்கோவில் நேதாஜி நகரில் பெற்றோருடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது சொந்த ஊரான சொக்கநாதன்புத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்துகொண்டு இருந்தார். வாசுதேவநல்லூர் அருகே வரும் போது, மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த கோபாலகிருஷ்ணன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாசுதேவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கோபாலகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.