விபத்தில் தொழிலாளி பலி


விபத்தில் தொழிலாளி பலி
x

சிவகாசியில் விபத்தில் தொழிலாளி பலியானார்.

விருதுநகர்

சிவகாசி,

ராஜபாளையம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 27). கூலி தொழிலாளியான இவர் ராஜபாளையத்திலிருந்து தனது நண்பரின் இருசக்கர வாகனத்தில் சிவகாசிக்கு வந்தார். சிவகாசி ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு வரும் போது அந்த வழியாக வந்த மினி வேன் மோதியதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆனந்தராஜ் மனைவி வனிதா கொடுத்த புகாரின் பேரில் வேன் டிரைவர் சின்ன மாரிமுத்துவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் சிவகாசி -ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து ஆர்.டி.ஓ. ஆலுவலகம் முன்பு விபத்து நடந்து வருகிறது. இதனால் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் தடுப்பு வேலிகளை அகற்றிவிட்டு நிரந்தர வேகத்தடை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Related Tags :
Next Story