சிகிச்சையில் இருந்த தொழிலாளி சாவு


சிகிச்சையில் இருந்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 20 Sept 2022 12:30 AM IST (Updated: 20 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

சிகிச்சையில் இருந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல்

நத்தம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 31). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 14-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story