தொழிலாளி, சிகிச்சை பலனின்றி சாவு


தொழிலாளி, சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 3:54 PM IST)
t-max-icont-min-icon

மரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த தொழிலாளி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திட்டச்சேரியை அடுத்த விழுதியூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 65). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 9-ந் தேதி இடையாத்தான்குடி அருகே மரம்வெட்டும் வேலை செய்த போது எதிர்பாராமல் மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து காயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாைக அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story