பெண் தவற விட்ட கைப்பையை மீட்டு போலீசில் ஒப்படைத்த தொழிலாளி
பெண் தவற விட்ட கைப்பையை மீட்டு போலீசில் ஒப்படைத்த தொழிலாளி
நீலகிரி
கூடலூர்
கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, மார்னிங் ஸ்டார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கண்காட்சி நடைபெறும் மைதானத்தில் கூடலூர் சிவ சண்முக நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி செல்வராஜ் என்பவர் கீழே கிடந்த கைப்பையை கண்டெடுத்தார். அதை திறந்து பார்த்தபோது தங்க சங்கிலி மற்றும் வெள்ளி கொடி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து செல்வராஜ் தனது நண்பர்களுடன் கூடலூர் போலீசின் நிலையத்தில் அந்த கைப்பையை ஒப்படைத்தார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கூடலூர் துப்புக்குட்டி பேட்டையை சேர்ந்த துர்கா, விஜய் ஆகியோருக்கு சொந்தமான கைப்பை என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் வரவழைக்கப்பட்டு கைப்பை ஒப்படைக்கப்பட்டது. கீழே கிடந்த கைப்பையை எடுத்து கொடுத்த செல்வராஜை, சப்-இன்ஸ்பெக்டர் ராமேஷ்வரன் மற்றும் போலீசார் பாராட்டினர்.
Related Tags :
Next Story