பஸ்சில் வந்த தொழிலாளி திடீர் சாவு
பஸ்சில் வந்த தொழிலாளி உயிரிழந்தார்.
வேலூர்
குடியாத்தம் அருகே உள்ள கமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 60), தொழிலாளி. இவர் குடும்பத்துடன் வேலூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு அரசு பஸ்சில் வந்தார். முருகன் தூங்கியபடி வந்துள்ளார். வேலூர் பழைய பஸ்நிலையத்துக்கு காலை 11.30 மணியளவில் பஸ் வந்து சேர்ந்தது. அவரை குடும்பத்தினர் எழுப்பி உள்ளனர். அப்போது முருகன் சுயநினைவின்றி காணப்பட்டுள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சிறிதுநேரத்தில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் ஏற்கனவே பஸ்சிலேயே உயிரிழந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். முருகன் இயற்கையான முறையில் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story