அரசு பஸ் நிற்காமல் சென்றதால் தொழிலாளர்கள் சாலை மறியல்


அரசு பஸ் நிற்காமல் சென்றதால் தொழிலாளர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடம் அருகே பேருந்து நிறுத்தத்தில் அரசு பஸ் நிற்காமல் சென்றதால் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர்

பெண்ணாடம்,

பெண்ணாடம் அருகே கணபதிகுறிச்சி, பாசிக்குளம், புக்குழி, கிளிமங்கலம், பெலாந்துறை, குறுக்கத்தஞ்சேரி உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாய பெண் கூலி தொழிலாளர் பலர் தினந்தோறும் காலை 6 மணிக்கு முருகன்குடி பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் மூலம் பெண்ணாடம் ரெயில் நிலையத்துக்கு சென்று அங்கிருந்து ரெயில் மூலம் லால்குடி, டால்மியா, அரியலூர், மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விவசாய கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.

அதன்படி வழக்கம்போல் கூலி வேலைக்கு செல்வதற்காக 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலை முருகன்குடி பேருந்து நிறுத்தத்திற்கு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. இதனால் பெண்கள் பெண்ணாடம் ரெயில் நிலையத்துக்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியவில்லை.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் கூலி வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் அவர்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பெண்கள் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story