இளம்பெண் மயங்கி விழுந்து சாவு
இளம்பெண் மயங்கி விழுந்து இறந்தார்.
திருச்சி காந்திமார்க்கெட் ஜெயில்பேட்டையை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி அலங்கவள்ளி (வயது 26). இவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 10 மாதத்துக்கு முன்பு அலங்கவள்ளி பிரசவத்துக்காக கும்பகோணத்தில் இருந்து ஜெயில்பேட்டையில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு வந்தார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அலங்கவள்ளி சமயபுரம் தேர்த்திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் தீச்சட்டி எடுத்து சென்றார். பின்னர் வீட்டுக்கு வந்து தூங்கி கொண்டு இருந்தார். அப்போது அவரது வீட்டிற்கு வெளியே வாத்தியகருவிகள் இசைத்து கொண்டு சென்ற சத்தம் கேட்டது. உடனே வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தார். அப்போதுஅவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.