இளம் பெண்ணை கடத்தி மது குடிக்க வைத்து பாலியல் பலாத்காரம்: கும்பல் கைது


இளம் பெண்ணை கடத்தி மது குடிக்க வைத்து பாலியல் பலாத்காரம்: கும்பல் கைது
x
தினத்தந்தி 28 Jun 2022 5:23 PM IST (Updated: 28 Jun 2022 5:24 PM IST)
t-max-icont-min-icon

அந்த 20-வயது பெண்ணை கடத்தி வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் கடந்த 25 ஆம் தேதி செங்கல்பட்டு - காஞ்சிபுரம் பைபாஸ் சாலை பஸ்நிலையத்தில் வேலூர் செல்வதற்காக நின்றிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த ஆத்தூர் வடபாதி பாளையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் சரவணன் வயது (29)மற்றும் அவருடைய நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து அந்த 20-வயது பெண்ணை கடத்தி வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

நடந்த இந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் அப்பெண் கூறிகதறி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் தாய் உடனடியாக செங்கல்பட்டு அனைத்து மகளிர் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த பலாத்கார வழக்கின் முக்கிய குற்றவாளியான சரவணனை மடக்கி பிடித்து கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள சரவணனின் கூட்டாளிகள் மூன்று பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story