தூக்கில் பிணமாக தொங்கிய இளம்பெண்


தூக்கில் பிணமாக தொங்கிய இளம்பெண்
x

சிங்கம்புணரி அருகே தூக்கில் இளம்பெண் பிணமாக தொங்கினார்.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலத்தை சேர்ந்தவர் சேதுபாண்டியன். இவருடைய மகன் சிவமணிகண்டன்(வயது 31). இவருக்கும் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா தூவார் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகள் பிரியங்காவுக்கும்(26) கடந்த 6 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாமனார் சேதுபாண்டியன் சிங்கம்புணரி வாரச்சந்தைக்கு சென்று காய்கறிகள் வாங்கி வந்து உள்ளார். அதனை எடுத்து வைக்கும்படி கணவர் சிவமணிகண்டன் பிரியங்காவுடன் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் மாடிக்கு சென்ற பிரியங்கா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் எஸ்.வி.மங்கலம் போலீசார் விரைந்து சென்று பிரியங்கா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரியங்கா சாவு குறித்து மர்மம் இருப்பதாக அவரது தந்தை கண்ணன் போலீசில் புகார் செய்து உள்ளார். திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.


Related Tags :
Next Story