தங்க சங்கிலியை போலீசில் ஒப்படைத்த வாலிபர்
பஸ் நிலையத்தில் பெண் தவறவிட்ட தங்க சங்கிலியை போலீசில் வாலிபர் ஒப்படைத்தார்.
தென்காசி
சிவகிரி:
சிவகிரி பிராட்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யம்மாள் (வயது 45). இவர் வெளியூர் செல்வதற்காக சிவகிரி பஸ் நிலையம் வந்தார். சிறிது நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த 1¾ பவுன் தங்கசங்கிலியும், ஏ.டி.எம். கார்டும் தவறவிட்டு விட்டார். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வெள்ளச்சாமி (35) என்பவர் பஸ் நிலையத்தில் கிடந்த தங்க சங்கிலி, ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை கைப்பற்றி சிவகிரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை நடத்தி, அய்யம்மாளிடம் நகை, ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை ஒப்படைத்தனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ், வெள்ளச்சாமிக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.
Related Tags :
Next Story