விருத்தாசலத்தில்பஸ் கண்டக்டரிடம் பணப்பையை பறித்த வாலிபர்பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு


விருத்தாசலத்தில்பஸ் கண்டக்டரிடம் பணப்பையை பறித்த வாலிபர்பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கண்டக்டரிடம் இருந்து பணப்பையை பறித்துக் கொண்டு ஓடிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்


விருத்தாசலம்,

சிதம்பரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று சேலம் நோக்கி புறப்பட்டது. இந்த பஸ் விருத்தாசலம் பேருந்து நிலையத்திற்கு வந்தது. அப்போது கண்டக்டர் சுகுமார் பஸ்சில் இருந்து கீழே இறங்கி நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த வாலிபர் ஒருவர், கண்டக்டர் சுகுமார் வைத்திருந்த பணப் பையை திடீரென பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.

இதில் அதிர்ச்சி அடைந்த கண்டக்டர் சுகுமார் திருடன், திருடன் என கூச்சலிட்டார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள், அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்து விருத்தாசலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டையை சேர்ந்த சேகர் மகன் அமர்நாத் என்கிற சரவணன் (வயது 25) என்பது தெரியவந்தது.

கைது

மேலும் அவர் கண்டக்டரிடம் இருந்து பணப்பையை பறித்துக் கொண்டு ஓடியதையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சரவணன் மீது சின்னசேலம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story