வாலிபரை தாக்கி நகை பறிப்பு
வாலிபரை தாக்கி நகையை பறித்து சென்றனர்
மானூர்:
மானூர் அருகேயுள்ள ராமையன்பட்டி - அரசு புதுக் காலனியைச் சேர்ந்தவர் காந்தீஸ்வரக்கண்ணன் மகன் சத்திய பெருமாள் (வயது 25). கூலித்தொழிலாளி. இவர் சிவாஜிநகர் பஸ் நிறுத்தம் அருகேயுள்ள ஒரு டெயிலர் கடையில் தனது தீபாவளி புது துணிகளை வாங்க சென்றுள்ளார்.
அவருடன் சென்ற அவரது நண்பர்கள் ராஜா மற்றும் அஜித் ஆகியோர் அங்கு வெடி போட்டுள்ளனர். சம்பவ இடத்தில் ஏற்கனவே மது போதையில் இருந்த செல்லத்துரை மகன் கணேசன் (22). லட்சுமணன் மகன் சுடலைமணி (20) மற்றும் கொம்பையா மகன் சுப்பிரமணி ஆகியோர் அதனை கண்டித்ததுடன் தகராறும் செய்துள்ளனர். தொடர்ந்து மூவரும் சேர்ந்து சத்திய பெருமாளை தாக்கியதோடு அவரது கழுத்தில் கிடந்த வெள்ளி செயினையும் பறித்து கொண்டு, கொலை மிரட்டலும் விடுத்துவிட்டு ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணேசன் மற்றும் சுடலைமணியை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர். சுப்பிரமணியை தேடி வருகின்றனர்.