ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்த வாலிபர் கைது


ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்த வாலிபர் கைது
x

திண்டிவனம் அருகே ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் அருகே பிரம்மதேசத்தில் தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் ஏ.டி.எம்.மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக ஒருவர் சென்றார். அப்போது அவர் தனது ஏ.டி.எம்.கார்டு மூலம் எந்திரத்தில் பணம் எடுக்க முயன்றார். ஆனால் எந்திரத்தில் பணம் இல்லை. பணம் கிடைக்காததால் ஆத்திரமடைந்த அவர் அருகில் கிடந்த கல்லை எடுத்து அடித்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தார். இது குறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்தது மரக்காணம் அருகே ராஜாம்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 32) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story