பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு தர்ம அடி
பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு தர்ம அடி விழுந்தது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு 70 அடி சாலையில் தனியார் பள்ளி அருகே வாலிபர் ஒருவர் அந்த வழியாக செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளை கேலி செய்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதைப் பார்த்த அந்த வழியாக சென்ற நபர்கள் அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து ஆற்காடு டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த கிராம உதவியாளர் பாஸ்கர் என்பவரது மகன் வேல்முருகன் (வயது 25) என்பதும், ஆற்காட்டில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்த இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், இவர் ஏற்கனவே இதுபோன்று பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் இது குறித்து ஆற்காடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story