வீட்டை சூறையாடிய வாலிபர் கைது
வீட்டை சூறையாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி
பேட்டை:
பேட்டை திருத்து ரோடு சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கி (வயது 36). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு பேட்டை கருங்காடு ரோட்டை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் மகேஷ் (24) என்பவர் ரூ.10 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார்.
இந்தநிலையில் மகேஷ் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு இசக்கி வீட்டிற்கு சென்றுள்ளார். இசக்கியிடம் பணம் கேட்டபோது பணம் தராததால் ஆத்திரமடைந்த மகேஷ், இசக்கி வீட்டை அடித்து நொறுக்கினார். இதுகுறித்து இசக்கி பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேசை கைது செய்தனர்.
Related Tags :
Next Story