பழக்கடையில் பணம் திருடிய வாலிபர் பிடிபட்டார்


பழக்கடையில் பணம் திருடிய வாலிபர் பிடிபட்டார்
x
தினத்தந்தி 26 May 2023 12:15 AM IST (Updated: 26 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தட்டார்மடத்தில் பழக்கடையில் பணம் திருடிய வாலிபர் பிடிபட்டார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தட்டார்மடம் ரஸ்தா தெருவை சேர்ந்தவர் மரிய சார்லஸ் (வயது 50). இவர் சாத்தான்குளம் புதிய பஸ் நிலையத்தில் பழக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம் போல் கடையை பூட்டுவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது, ரூ.2 ஆயிரத்தை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மரிய சார்லஸ் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினராஜ் விசாரணை நடத்தியதில், பாளையங்கோட்டை கோட்டூரை சேர்ந்த இசக்கி மகன் கார்த்தீசன் (வயது 22) இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story