மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்


மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்
x

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போனதால் அதன் உரிமையாளர்கள் பெரும் அச்சமடைந்தனர். இதுகுறித்து இருசக்கர வாகனங்களை பறிகொடுத்த இலுப்பூர் பள்ளிவாசல்காடு பகுதியை சேர்ந்த சாதிக்பாட்சா(வயது44), அந்தோணியர் கோவில் பகுதியை சேர்ந்த கணேசன்(60) ஆகியோர் இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மொழி, அரசு உத்தரவின் பேரில் தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் இலுப்பூர் அருகே மேடுகாடுப்பட்டி என்னும் இடத்தில் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருடும்போது பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட திருடன் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள ஊத்துக்குளியை சேர்ந்த கார்த்திகேயன்(24) எனவும், இவர் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து கார்த்திகேயனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து கார்த்திகேயனை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story