விழுப்புரம் அருகேநாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


விழுப்புரம் அருகேநாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

விழுப்புரம்

வளவனூர்,

புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபால் மகன் கவுதம் (வயது 23). ரவுடியான இவர் மீது விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பகுதிகளில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 14.1.2023 அன்று எஸ்.மேட்டுப்பாளையம் அருகே பொங்கல் செலவிற்கு பணம் தராததால் ஏற்பட்ட விரோதம் காரணமாக நாட்டு வெடிகுண்டு வீசியதாக கவுதமை வளவனூர் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். அதன்பேரில் கவுதமை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி உத்தரவிட்டார். இதையடுத்து கவுதமை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.


Next Story