சிறுமியை கடத்த முயன்ற வாலிபருக்கு தர்ம அடி


சிறுமியை கடத்த முயன்ற வாலிபருக்கு தர்ம அடி
x
தினத்தந்தி 20 Aug 2023 2:45 AM IST (Updated: 20 Aug 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை கடத்த முயன்ற வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

திண்டுக்கல்

வடமதுரை, ஆக.20-

வடமதுரை அருகே உள்ள புதுக்கலராம்பட்டி, வடக்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 23). சம்பவத்தன்று இவர், தெருவில் நடந்து சென்ற 13 வயது சிறுமியை கையை கட்டி கடத்திச்செல்ல முயன்றார். அப்போது சிறுமி கூச்சல் போடவே அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதை பார்த்த சுரேஷ்குமார், சிறுமியை கீழே வைத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்றார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். இதற்கிடையே தகவலறிந்து அங்கு வந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுரேஷ்குமாருக்கு தர்ம அடி கொடுத்தனர். இதில் காயமடைந்த அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வடமதுரை அனைத்து மகளிர் போலீசார், சுரேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் தன்னை தாக்கியதாக சுரேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் சிறுமியின் உறவினர்களான காளியப்பன் (60), மயில்முருகன் (34), வெள்ளைச்சாமி (28) ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story