16 வழக்குகளில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது


16 வழக்குகளில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
x

குடியாத்தத்தில் 16 வழக்குகளில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

குடியாத்தம் சீவூர் கிராமத்தை சேர்ந்தவர் தசரதன். இவரது மகன் சுகுமார் (வயது 29). இவர் மீது குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் 16 திருட்டு வழக்குகள் பதியப்பட்டு, கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்குகளில் சுகுமார் பல மாதங்களாக கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. அவரை கைது செய்ய வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் நேரடி மேற்பார்வையில், குடியாத்தம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், காவலர் பிரவீன் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்த சுகுமாரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கம் பகுதியில் சுகுமார் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று தனிப்படையினர் சென்று சுகுமாரை கைது செய்தனர்.


Next Story