இயக்குனர் மாரி செல்வராஜை கண்டித்து தியேட்டர் முற்றுகை- 16 பேர் கைது
இயக்குனர் மாரி செல்வராஜை கண்டித்து தியேட்டர் முற்றுகையிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர்
திரைப்பட இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி தயாரித்து நடித்த மாமன்னன் திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் வெளியானது. இந்த திரைப்படம் இருவேறு தரப்பினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக கூறி அந்த படத்தை தடை செய்யக்கோரி நேதாஜி சுபாஷ் சேனை மாநில செயலாளர் சுமன் தேவர் தலைமையிலும், முக்குலத்தோர் எழுச்சி கழகம் சார்பாக மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வம் முன்னிலையிலும் மாமன்னன் திரைப்படம் வெளியான செல்லூர் பகுதியில் உள்ள தியேட்டர் முன்பாக திரண்டனர். பின்னர் இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு எதிராக கண்டன கோஷமிட்டு தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்பு மாலையில் அவர்களை விடுவித்தனர்.