சாலைகளில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
சாலைகளில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
திருப்பூர்
பல்லடம்
பல்லடம் போலீஸ் நிலையம் எதிரே தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்துகள் நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
பல்லடத்தில் தற்போது சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு சாலைகளில் இடவசதி உள்ளது. இந்த நிலையில் சாலைகளில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்துகள் நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக போலீஸ் நிலையம் எதிரே அமைந்துள்ள டீக்கடை முன்பு வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குபடுத்தி விபத்துகள் நேராக வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
---------------
Related Tags :
Next Story