தேர்களில் முகூர்த்தகால் நடும் விழா


தேர்களில் முகூர்த்தகால் நடும் விழா
x
திருப்பூர்


திருப்பூர் விஸ்வேஸ்வர சாமி, வீரராகவ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா வருகிற 2-ந் தேதி, 3-ந் தேதி நடக்கிறது. இதற்காக தேர்களை தயார்படுத்தும் பணி தொடங்கியது. நேற்று காலை தேர்களில் முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

கோவில் செயல் அதிகாரி சரவணபவன் முன்னிலை வகித்தார். கோவில் அர்ச்சகர்கள், தேர் ஆசாரி ஆகியோர் திருத்தேர்களில் சிறப்பு பூஜை செய்து முகூர்த்தகால் நட்டனர். இதைத்தொடர்ந்து திருத்தேரில் கம்பங்கள் அமைத்து தேர் அலங்கரிக்கும் பணி தொடங்கியது. வருகிற 25-ந் தேதி தேரில் மகுடம் அமைக்கும் பணி நடக்கிறது. தேர் அலங்கரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.


Next Story