தீர்த்தக்காவடி ஊர்வலம்


தீர்த்தக்காவடி ஊர்வலம்
x

தண்டாயுதபாணி சுவாமி பக்தர்கள் பேரவை சார்பில் தீர்த்தக்காவடி எடுத்து பழனியில் ஊர்வலம் நடந்தது.

திண்டுக்கல்

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கி உள்ளதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி பக்தர்கள் பேரவை சார்பில், 400-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். முன்னதாக பேரவையின் தலைவர் அழகர் தலைமையில் பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து தீர்த்தக்காவடிகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து பழனி முருகன் கோவிலுக்கு வந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் துணைத்தலைவர் முத்து, செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் சிவசூர்யா, துணை பொருளாளர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் பேரவை சார்பில் அடிவாரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story