தேன்கனிக்கோட்டை அருகே பரபரப்புடாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் திருட்டுமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.
சுவரில் துளையிட்டு...
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா இருதுக்கோட்டையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்த ராமசாமி (வயது 47) என்பவர் மேற்பார்வையாளராக உள்ளார். அதேபோல் மாரண்டஅள்ளி அருகே உள்ள பொம்மனூர் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி (48) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை அவர்கள் இருவரும் பூட்டிவிட்டு சென்றனர். பின்னர் நேற்று காலை கடையை திறக்க வந்த போது கடையின் முன்பு இருந்த கிரில் கேட் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்த போது ஷட்டர் பூட்டு உடைக்கப்படவில்லை. இதனால் அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
ஆனால் கடையின் சுவரில் துளையிடப்பட்டு இருந்ததை அவர்கள் கவனித்தனர். இதனால் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது 10 பெட்டிகளில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபானம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசில் கடை மேற்பார்வையாளர் புகாா் கொடுத்தார். அதன்பேரில், ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் கடையில் பணம் எதுவும் இல்லாததால் மதுபாட்டில்களை மட்டும் மர்மநபா்கள் திருடிச்ெசன்று உள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மதுபாட்டில்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் இருதுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.