Normal
மயிலத்தில் பெட்டிக்கடையில் திருட்டு
மயிலத்தில் பெட்டிக்கடையில் திருட்டு போனது.
விழுப்புரம்
மயிலம்,
மயிலம் சன்னதி வீதியை சேர்ந்தவர் சங்கரலிங்கம் மகன் அய்யப்பன் (வயது 38). இவர் பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த 20 வயது வாலிபர், தண்ணீர் பாட்டில், சிகரெட் போன்றவற்றை கேட்டுள்ளார்.
இந்த பொருட்களை கடைக்குள் இருந்து அய்யப்பன் எடுத்து கொண்டு இருந்தார். இதை பயன்படுத்தி, கடையில் இருந்த ரூ.5 ஆயிரம் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகளை அந்த வாலிபர் திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து அய்யப்பன் மயிலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட வாலிபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story