கடையில் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் திருட்டு
கடையில் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழக்கரை,
கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை இந்துக்கள் மைதானத்தின் எதிரில் கடை ஒன்று உள்ளது. இந்த கடை உரிமையாளர் நேற்று வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைந்து கிடந்தது.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர். உள்ளே சென்று பார்த்தபோது பூட்டை உடைத்து ரூ. 10 ஆயிரத்து 500-ஐ வடமாநில வாலிபர் திருடி சென்றது சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது தெரியவந்தது. உடனே கீழக்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். கீழக்கரை இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் கடைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக கீழக்கரையில் வட மாநிலத்தவர்களின் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு லட்சுமிபுரத்தில் உள்ள டிட்டோ என்பவரின் வீட்டில் 25பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சத்தை திருடி சென்றது குறிப்பிடத்தக்கது. கீழக்கரையில் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.