மதுபாட்டில்கள் திருட்டு
டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் திருடியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள காட்டூரணி பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ளது. இந்த கடையில் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து பணியாளர்கள் கடையை அடைத்து விட்டு வீட்டுக்குச் சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் அந்த வழியாக போலீசார் ரோந்து சென்ற போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு மேற்பார்வையாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மேற்பார்வையாளர் தனுஷ்கோடி (வயது52) அங்கு விரைந்து வந்து பார்த்த போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்த ரூ.860 மற்றும் ரூ.1440 மதிப்பிலான 9 பீர் பாட்டில்கள் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தனுஷ்கோடி அளித்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story