கீழக்கரை பகுதியில் தொடர் திருட்டு


கீழக்கரை பகுதியில் தொடர் திருட்டு
x

கீழக்கரை பகுதியில் தொடர் திருட்டை தடுக்க போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம்

கீழக்கரை,

கீழக்கரை இந்து பஜாரில் அமைந்துள்ள காம்ப்ளக்சில் முத்து என்பவர் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர் ரூ.73 ஆயிரம் மற்றும் 8 செல்போன்கள் திருடி சென்றுவிட்டார். இந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது.இது குறித்தபுகாரின் பேரில் கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்று கீழக்கரையில் நடைபெறும் தொடர் திருட்டால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே இரவு நேரங்களில் போலீசார் ரோந்து செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story