வீட்டு கதவை உடைத்து 20½ பவுன் நகை, பணம் திருட்டு

வீட்டு கதவை உடைத்து 20½ பவுன் நகை, பணம் திருட்டு
x

சிங்கம்புணரியில் வீட்டு கதவை உடைத்து 20½ பவுன் நகை மற்றும் பணம் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் வீட்டு கதவை உடைத்து 20½ பவுன் நகை மற்றும் பணம் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கதவு உடைப்பு

சிங்கம்புணரி சுந்தரம் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது 70). இவர் ஓய்வுபெற்ற தபால் துறை அலுவலர். இவரது மனைவி சத்துணவு பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். ஜெயபாலன் தனது மனைவியுடன் காரைக்குடியில் உள்ள மகன் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த 20½ பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், லேப்டாப் மற்றும் ரூ. 11,000 திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

விசாரணை

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து சிங்கம்புணரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story