வழிகாட்டும் தகவல் பலகை திருட்டு
வழிகாட்டும் தகவல் பலகை திருடப்பட்டது.
மதுரை
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் சென்று வருவதற்கு வசதியாக மலையில் உள்ள நெல்லி தோப்பு பகுதியில் வழிகாட்டும் தகவல் பலகை மற்றும் பூஜை நேரங்கள் குறித்து மற்றொரு பலகையும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவில் நிர்வாகத்தின் சார்பில் வைக்கப்பட்டிருந்தது. இதை மர்மநபர்கள் திருடி சென்றனர். இது தொடர்பாக காசி விஸ்வநாதர் கோவில் காவலர் கணேசன் கொடுத்த தகவலின் பேரில் கோவில் கண்காணிப்பாளர் பால லட்சுமி திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story