மின்வாரிய அலுவலகத்தில் திருட்டு:


மின்வாரிய அலுவலகத்தில் திருட்டு:
x

பேரிகை மின்வாரிய அலுவலகத்தில் திருடிய மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையில் மின்வாரிய அலுவலகத்திற்குள் மர்ம நபர்கள் புகுந்து ஊழியர்களை தாக்கி அங்கிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரின் 15 பேர் கொண்ட கும்பலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இ்ந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஓசூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த வேலு (வயது27), சரவணன் (22), கூலிசந்திரம் நவீன் (22), காசி (22), மஞ்சு (22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் சானசந்திரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (23), ராபிக் (21), கெலமங்கலம் குபேந்திரன் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய அந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பேரிகை மின்வாரிய அலுவலகத்தில் பொருட்களை திருடிய வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story