ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை


ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை
x

ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம் ஜவகர் நகர் 12-வது தெருவை சேர்ந்தவர் ரவீந்திரன் முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி மணிமேகலை (வயது66). மதுரை மாநகராட்சி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ரவீந்திரன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவர்களுக்கு 2 மகன்கள், மூத்த மகன் பிரதீப் திருமணமாகி பெங்களூரில் குடியிருந்து வருகிறார். மணிமேகலை பெங்களூர் சென்று இருந்தார். 2-வது மகன் ராகேஷ் நண்பர்களுடன் வீட்டை பூட்டிவிட்டு குற்றாலம் சென்றுவிட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் மணிமேகலையின் வீட்டுகதவை உடைத்து உள்ளே இருந்த பீரோக்களை உடைத்து அதில் இருந்த 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். வீட்டை சுத்தம் செய்ய வந்த பணியாளர் ராமலட்சுமி வீட்டின் கதவு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பெங்களூரில் உள்ள மணி மேகலைக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து திருமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடையங்களை சேகரித்தனர். மேலும் அந்தபகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story