ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
திருமங்கலம் அருகே ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 11 பவுன் நகை, பணம் கொள்ளை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 11 பவுன் நகை, பணம் கொள்ளை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாமி தரிசனம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சஞ்சீவிராஜா (வயது 61). இவர் விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் குடும்பத்துடன் கடந்த 19-ந்் தேதி சாமி கும்பிட பழனிக்கு சென்றார்.
பழனிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 7 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் 5 மோதிரம், தோடு என 11 பவுன் நகை மற்றும் ரூ.4 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக கள்ளிக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேரையூர் போலீஸ் துணை சூப்பிரண்டு இலக்கியா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.