கடையின் பூட்டை உடைத்து லாரி டயர்கள் திருட்டு


கடையின் பூட்டை உடைத்து லாரி டயர்கள் திருட்டு
x

கடையின் பூட்டை உடைத்து லாரி டயர்கள் திருட்டு

தர்மபுரி

தர்மபுரி அருகே புலிக்கரை பகுதியில் சதீஸ்வரன் என்பவர் வாகன டயர்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நள்ளிரவில் இந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கடைக்குள் இருந்த 16 லாரி டயர்களை திருடி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கடை நிர்வாகிகள் இதுபற்றி மதிகோன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டயர்கள் திருட்டில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story