தாய், மகளுக்கு அரிவாள் வெட்டு; 6½ பவுன் நகை பறிப்பு
தாய், மகளை அரிவாளால் வெட்டி 6½ பவுன் நகையை பறித்தவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
சிவகங்கை
காரைக்குடி,
தேவகோட்டை மின்வாரிய அலுவலக வீதியில் வசிப்பவர் பாண்டி. இவரது மனைவி உமா மகேஸ்வரி (வயது 40). உமா மகேசுவரியும் அவரது மகள் மணிபாரதியும் காரைக்குடி அருகே உள்ள வெட்டிவயல் கிராமத்தில் உள்ள தங்களது உறவினர்களை பார்க்கச்சென்றனர். பின்னர் அங்கிருந்து தேவகோட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். நென்மேனி விலக்கு அருகே வரும்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் இவர்களை வழிமறித்து 6½ பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இதனை தடுக்க முயன்ற உமாமகேசுவரி மற்றும் மணிபாரதியை அரிவாளால் வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டனர். படுகாயம் அடைந்த அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story